தளபதி விஜய் தனது சமீபத்திய ஆல் டைம் பிளாக்பஸ்டர் ‘லியோ’ வெளியாவதற்கு முன்பே வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தின் படப்பிடிப்பை அக்டோபரில் தொடங்கினார்.
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் ‘தளபதி 68’ திரைப்படத்தை தயாரித்து வருகிறது. தயாரிப்பாளர்கள் சென்னை மற்றும் தாய்லாந்தில் இரண்டு ஷெட்யூல்களை முடித்துள்ளனர். இப்படத்தின் மூன்றாவது ஷெட்யூல் அடுத்த வாரம் சென்னையில் தொடங்கும் என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ‘தளபதி 68’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், புத்தாண்டு ஸ்பெஷலாக ஜனவரி 1, 2024 அன்று வெளியிடப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் வரை பிரமாண்டமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.தளபதி 68 படத்தில் விஜய், பிரபுதேவா, சினேகா, பிரசாந்த், லைலா, மைக் மோகன், யோகி பாபு, மீனாட்சி சவுத்ரி, VTV கணேஷ், பிரேம்கி, வைபவ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் இப்படம் அறிவியல் புனைகதை ஆக்ஷன் த்ரில்லர் என கூறப்படுகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவும், சண்டைக்காட்சிகளை திலிப் சுப்பராயனும், படத்தொகுப்பு வெங்கட் ராஜனும் செய்கிறார். அப்டேட் வந்து பல நாட்கள் கடந்த நிலையில், தற்போது ரசிகர்கள் சோசியல் மீடியாக்களில் எப்போது அப்டேட் வரும் என கேட்ட வண்ணம் உள்ளனர். விரைவில் படத்தின் அப்டேட் நாம் எதிர்பார்க்கலாம் என தெரிகிறது.